Why should we be dependent on another’s opinion of us?

*வாழ்க்கை*

Live well

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக  காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.
எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து  அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.
அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.
இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக  வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.
என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது! 
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!! 
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!! 
இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!
நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்????
யார் இவர்கள்????
என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????
நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!
மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!
தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப்போவதில்லை. இது தான் வாழ்க்கை.
*”பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்”*
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி

” யாருக்கு இது’ பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து

“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.

அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை.

ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் 

……

*அழகான வரிகள் பத்து*. 

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்.. நாம் எல்லோரும் *சாதாரண மனிதர்கள்* 2,பொறாமைக்காரரின் பார்வையில்.. நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்* 3. நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. நாம் *அற்புதமானவர்கள்* 4,நேசிப்போரின் பார்வையில்.. நாம் *தனிச் சிறப்பானவர்கள்* 5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம் *கெட்டவர்கள்* 

7. சுயநலவாதிகளின் பார்வையில் நாம்… *ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*

 8. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்* 

9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்* 

10. கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்* நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனியான பார்வை உண்டு. ஆதலால் – பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்* மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்…… *நீங்கள் நீங்களாகவே இருங்கள்* மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு… இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!* *அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்…!* எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும. *படித்ததில் பிடித்தது பகிர்கிறேன்*  ,,,,,,,,,,,,,,